Breaking News

குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழப்பு? - பெயர் விவரம் வெளியிட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் முழு விவரம்

அட்மின் மீடியா
0

குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழப்பு பெயர் விவரம்

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 53 பேர் பலியாகியுள்ளனர். 

மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

 

குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்துள்ளார்கள் எனவும் அவர்களின் பெயர் விவரம்

கருப்பண்ணன் ராமு, 

வீராசாமி மாரியப்பன், 

சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, 

முகம்மது ஷரீப், 

புனாஃப் ரிச்சர்டு ராய் 

ஆகியோர் உயிரிழந்துள்ளனர்

உடல்களை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது  என  அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் தெரிவித்துள்ளார்.

எனினும், தமிழர்கள் இறப்பு குறித்து தூதரகம் மூலம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback