சவுதி அரேபியாவில் கடும் வெப்ப அலை ஹஜ் பயணிகள் 550 பேர் உயிரிழப்பு! முழு விவரம் Heat wave kills 550 hajj pilgrims in Saudi Arabia
முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும்.
ஆண்டுதோறும் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணம் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரைக்காக வெளிநாடுகளில் இருந்து இதுவரை 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெக்காவில் குவிந்துள்ளனர்.
இதற்காக சுமார் 15 லட்சம் பக்தர்கள் சௌதி அரேபியாவிலுள்ள புனித நகரமான மெக்காவில் திரண்டுள்ளனர். இந்த ஆண்டு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெக்காவில் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி உள்ளது. இதனால், புனித பயணம் மேற்கொள்பவர்கள், அதிக வெப்ப சூழலில் நீர்ச்சத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
வெப்ப தாக்கத்தினை எதிர்கொள்ள கூடிய வகையிலான மருத்துவ குழுவினர் உள்பட 1,600 இராணுவ வீரர்களை சவுதி இராணுவம் அனுப்பியுள்ளது. இதேபோன்று, 30 அதிரடி விரைவு குழுவினரும், 5 ஆயிரம் சுகாதார மற்றும் முதலுதவி தன்னார்வலர்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் ஹஜ் பயணத்தின் போது குறைந்தது 550 பயணிகள் இறந்ததாக பல்வேறு நாடுகளின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் குறைந்தது 323 பேர் எகிப்தியர்கள், அவர்களில் பெரும்பாலோர் வெப்பம் தொடர்பான பாதிப்புகளுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, ஜெட்டாவில் உள்ள சவுதி அதிகாரிகளிடம் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அவர்களின் உடல்களை ஜோர்டானுக்கு திரும்ப கொண்டு வருவதற்கான பணிகளை ஜோர்டான் மேற்கொண்டு வருகிறது.
Tags: மார்க்க செய்திகள் வெளிநாட்டு செய்திகள்
