கனமழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்து தென்பெண்ணை ஆற்றில் கவிழ்ந்த கார் !அதிஷ்டவசமாக உயிர் தப்பிய் 5 பேர்
கனமழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்து தென்பெண்ணை ஆற்றில் கவிழ்ந்த கார் !அதிஷ்டவசமாக உயிர் தப்பிய் 5 பேர்
திடீர் கனமழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார் தென்பெண்ணை ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சேர்ந்தவர்கள் சிவபாலன், சுந்தர் உள்ளிட்ட ஐந்து பேர் கடலூரில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டு பின்னர் பாண்டி சென்றுகொண்டிருந்தபோது
கடலூரில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தில் கொண்டிருந்தபோது கடலூரில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வந்த நிலையில் எதிர்பாராதவிதமாக கார் தென்பெண்ணை ஆற்றில் இருந்த தண்ணீரில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
கார் கவிழ்ந்த வேகத்தில் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது. இதை அடுத்து காரில் பயணம் செய்த 5 பேரும் காரின் கதவை உடைத்து தண்ணீரில் நீந்தி அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.தண்ணீரில் மூழ்கிய காரை இன்று பொக்களின் எந்திரன் மூலம் கயிறு கட்டி மீட்கப்பட்டது.
Tags: தமிழக செய்திகள்
