Breaking News

புனித ஹஜ் பயணத்தில் உயிரிழந்த 4 தமிழர்களின் உடல்கள் சவூதியில் அடக்கம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

புனித ஹஜ் பயணத்தில் உயிரிழந்த 4 தமிழர்களின் உடல்கள் சவூதியில் அடக்கம் முழு விவரம் 

ஹஜ் பயணம் மேற்கொண்ட போது உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 4 பேரின் உடல்களையும் சௌதியிலேயே அடக்கம் செய்ய அவர்களின் உறவினர்கள் சம்மதம் தெரிவித்ததாக அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் தனது டிவிட்டர் பதிவில்:-

ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரசிக்க பீவி (73), 

திருநெல்வேலியைச் சேர்ந்த மைத்தீன் பாத்து (73), 

சென்னையைச் சேர்ந்த நசீர் அஹமது (40), 

கரூரைச் சேர்ந்த லியாக்கத் அலி (72) 

ஆகியோர் இதய நோய் தொடர்பான பிரச்னைகளால் ஹஜ் செய்கின்றபோது மக்கா, அராபத், மினா ஆகிய இடங்களில் இயற்கை எய்தி உள்ளனர். 

இயற்கை எய்தியவர்கள் அனைவரும் அனைவரையும் சவூதியிலே அடக்கம் செய்ய அவர்களுடைய குடும்பத்தினர் ஒத்துக் கொண்டுள்ளனர். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback