டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து 3 பேர் உயிரிழப்பு முழு விவரம்
டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து 3 பேர் உயிரிழப்பு முழு விவரம்
டெல்லியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 1 பகுதியில் இருக்கும் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் அந்த பகுதியில் நிறுத்தி வைத்திக்கப்பட்டிருந்த கார்கள் பலத்த சேதமடைந்தன.மேற்கூரை ஷீட் தவிர, சப்போர்ட் பீம்களும் சரிந்து, முனையத்தின் பிக்-அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து கார்களையும் சேதப்படுத்தியது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகள் பகுதியில் சிக்கியிருந்த 7 பேரை மீட்டனர். இதையடுத்து உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் மேலும் இருவர் உயிரிழந்தனர். இதன் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து காரணமாக டெர்மினல் 1 பகுதியில் இன்று பகல் 2 மணி வரை விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. செக்-இன் கவுண்டர்களும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், டெல்லி விமான நிலையம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ளது. டெல்லி விமான நிலைய அதிகாரிகள் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும் இழப்பீடாக அறிவித்துள்ளனர்.
விபத்து வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/mshahi0024/status/1806532866664509530
Tags: இந்திய செய்திகள்
