தமிழ்நாட்டில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயர்வு அமலானது! முழு விவரம்
தமிழ்நாட்டில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயர்வு அமலானது! முழு விவரம்
நாடு முழுவதும் ஜூன் 2 ஆம் தேதி நள்ளிரவு முதல் புதிய சுங்கக் கட்டணம் அமல் முழு விபரம்
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஜூன் 2 ஆம் தேதி நள்ளிரவு முதல் புதிய சுங்கக் கட்டணம் அமல் ₹5 முதல் ₹20 ரூபாய் வரை விலை உயர்வு அமலாக உள்ளது என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு
கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி நாடு முழுக்க சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இருப்பினும், அப்போது கடைசி நேரத்தில் சுங்கக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது..
இந்நிலையில் இப்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில் (ஜூன் 2) நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது.
நாடு முழுக்க ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட சுங்கக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.. நாடு முழுக்க அந்த சுங்கக் கட்டண உயர்வே நாளை நள்ளிரவு அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் 75 முதல் 720 வரையிலும், மாதாந்திர பாஸ் கட்டணம் 100 முதல் 400 வரையிலும் உயர்ந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மக்களவை தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
பரனூர் சுங்கச்சாவடியை பொறுத்தவரை
கார், ஜீப், வேன், மூன்று சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ70ம், ஒரே நாளில் சென்று திரும்ப ரூ110ம் வசூலிக்கப்பட்டு வருகிறது .
மாதாந்திர கட்டணமாக ரூ2395 உயர்த்தப்பட்டுள்ளது.
இலகுரக சரக்கு வாகனங்கள் சிற்றுந்துகளுக்கு ஒரு முறை பயணம் செய்ய ரூ115ம் , ஒரே நாளில் சென்று திரும்ப ரூ175 ம் வசூலிக்கப்படுகிறது.
அதே போல் பேருந்து மற்றும் சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ245ம், ஒரே நாளில் சென்று திரும்ப ரூ365ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3 அச்சுகள் கொண்ட வர்த்தக வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ265 , ஒரே நாளில் சென்று திரும்ப ரூ400 கட்டணம் ஆகும்.
அதனைப் போலவே 4 சக்கரம் மற்றும் 6 சக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ350ம், ஒரே நாளில் சென்று திரும்ப ரூ570ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அ
உள்ளூர் கார்கள் ஒரு சுங்கச்சாவடியை கடக்க மாதம் 340 உத்தேச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
