சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பு படிக்கும் போது ரூ.30,000 உதவித்தொகை படித்து முடித்ததும் வேலை முழு விவரம்
சென்னை மெட்ரோவில் படிக்கும் போது ரூ.30,000 உதவித் தொகை படித்ததும் உடனே வேலை சென்னை ஐ.ஐ.டியும் மெட்ரோ இணைந்து புதிய படிப்பு அறிமுகம்
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) இந்திய தொழில்நுட்பக் கழகம்-மெட்ராஸ் (IIT-M) உடன் இணைந்து 'மெட்ரோ ரயில் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை (PGDMRTM) என்ற ) ஒரு வருட முதுகலை பட்டயப் படிப்பை வழங்குகிறது
படிப்பில் சேரும் மாணவர்களுக்கு உதவித் தொகை உடன் இந்த படிப்பை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்குகிறது.
இதில் சேர, பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் வரும் 29-ம் தேதிக்குள் careers.chennaimetrorail.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு முழுநேர ஆண்டு படிப்பின்போது மாதம் ரூ.30,000 வரை உதவித்தொகை வழங்கப்படும்.
படிப்பை முடித்தவுடன், அவர்கள் நேரடியாக சி.எம்.ஆர்.எல் நிறுவனத்தில் மாதம் ரூ.62,000 சம்பளத்தில் உதவி மேலாளராக நியமிக்கப்படுவர்.
சிவில் அல்லது எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்கில் பிஇ, பி.டெக், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் அல்லது மெக்கானிகல் இன்ஜினியரிங் முடித்து 70 சதவீத மார்க் எடுத்தவர்கள் மற்றும் கேட் தேர்வில் தகுதியான மதிப்பெண் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/CMRL-IIT-Madras-Employment-Notification-No.-CMRL-HR-CON-10-2024-dated-09.06.2024.pdf
Tags: வேலைவாய்ப்பு
