Breaking News

அமெரிக்க பெண்ணிடம் 300 ரூபாய் மதிப்பு போலி நகைகளை சுமார் 6 கோடிக்கு விற்ற நபர் முழு விபரம்

அட்மின் மீடியா
0

அமெரிக்க பெண்ணிடம் 300 ரூபாய் மதிப்பு போலி நகைகளை சுமார் 6 கோடிக்கு விற்ற நபர் முழு விபரம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜோஹ்ரி பஜாரில் நகை வியாபாரம் செய்து வருபவர் கவுரவ் சோனி. இவர் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் தன்னிடம் பல அரிய டிசைன்களில் விலை உயர்ந்த தங்க நகைகள் இருப்பதாக, 'வீடியோ' வெளியிட்டார்.

இதை பார்த்த அமெரிக்காவை சேர்ந்த செரிஷ் என்ற பெண், 2022ல் கவுரவ் சோனியை தொடர்பு கொண்டார். அவர் காட்டிய பல அட்டகாசமான டிசைன்களை கண்டு ஆச்சரியப்பட்ட செரிஷ், 6 கோடி ரூபாய் கொடுத்து, கவுரவிடம் இருந்து நகைகளை வாங்கியுள்ளார்.அமெரிக்காவில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நகை கண்காட்சியில், அந்த நகைகளை காட்சிக்கு வைத்தார். அப்போது தான் அவை போலியான நகைகள் என்பது தெரியவந்தது. 300 ரூபாய் மதிப்பிலான கவரிங் நகைகள் மீது தங்க முலாம் பூசி, அதை 6 கோடி ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது.

இதனையடுத்து இந்தியாவுக்கு திரும்பி வந்த அந்த அமெரிக்க பெண் நகை கடை உரிமையாளர் கவுரவ் சோனி & அவரது தந்தை ராஜேந்திர சோனி மீது நடவடிக்கை கோரி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

ஜெய்பூர் காவல் நிலையத்தில் கௌரவ் சோனி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback