Breaking News

மத்திய பிரதேசத்தில் 30 பேர் முஸ்லிம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினர் முழு விவரம் 30 Muslims have converted to Hinduism

அட்மின் மீடியா
0

மத்திய பிரதேசத்தில் 30 பேர் முஸ்லிம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினர் முழு விவரம் 30 Muslims have converted to Hinduism

மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மத்தியப் பிரதேச மதச் சுதந்திரச் சட்டம் 2021ன் படி 14 பெண்கள் உட்பட 30 பேர் இஸ்லாத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறியுள்ளதாக உள்ளூர் அமைப்பான 'சஜா சமஸ்கிருதி மஞ்ச்' தலைவர் சாம் பவ்ரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



மேலும் அவர் கூறுகையில் அங்குள்ள கஜ்ரானா விநாயகர் கோவிலில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 14 பெண்கள் உட்பட 30 பேர், வேத மந்திரங்கள் முழங்க, ஹிந்து மதத்திற்கு சட்டப்படி மாறினர். 

மேலும் அவர்கள் அனைவரும் மத்தியப் பிரதேச மதச் சுதந்திரச் சட்டம் 2021ன் கீழ், தாங்கள் முன்வந்து மதம் மாறுவதாக, மாவட்ட நிர்வாகத்திடம் இவர்கள் ஒரு பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளனர் இதில், எந்த விதிமீறலோ, கட்டாயப்படுத்தியோ மதமாற்றம் நிகழவில்லை, என்றார்.

மத்தியப் பிரதேச மத சுதந்திரச் சட்டம் 2021, பலாத்காரம், மோசடி அல்லது தூண்டுதலின் மூலம் மத மாற்றத்தைத் தடைசெய்வதற்காக இயற்றப்பட்டது மற்றும் மீறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=3TE62-QdWjw&t=122s

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback