Breaking News

அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு 

தமிழகத்தில் மீண்டும் கனமழை 16, 17 ம் தேதிஆரஞ்ச் அலர்ட்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,

25.06.2024 மற்றும் 26.06.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

27.06.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback