Breaking News

295 தொகுதிகளுக்கு மேல் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்... மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை

அட்மின் மீடியா
0
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 295 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை.வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் முழுமையாக எண்ணிக்கை முடியும் வரை இந்தியா கூட்டணிக் கட்சியினர் வெளியே வரக்கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

மக்களவைத் தேர்தலில் 7ம் கட்ட இறுதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.இந்தியா' கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், சரத்பவார் உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிவடைந்த பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் முழுமையாக எண்ணிக்கை முடியும் வரை இந்தியா கூட்டணிக் கட்சியினர் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 'இந்தியா' கூட்டணி 295 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

பா.ஜனதா ஆட்சி அமைப்பது சிரமம் என அரசு நிறுவனங்கள் உட்பட பல்வேறு கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் ஆலோசனை கூட்டத்திற்கு வந்துள்ளது உற்சாகம் அளிக்கிறது. 

நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம். எங்களை பிரிக்க முடியாது. விதிமுறைகள் படி வாக்குகளை எண்ணக்கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க உள்ளோம்." எனத் தெரிவித்துள்ளார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback