திருவள்ளூர் மாவட்டத்திற்கு 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
திருவள்ளூர் மாவட்டத்திற்கு 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
ஆடிக்கிருத்திக்கை நாளான ஜூலை 29ஆம் தேதி ( திங்கள்கிழமை ) அன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் இந்த உள்ளூர் விடுமுறை தினத்தன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கருவூலங்கள் , அவசர பாதுகாப்பு அலுவலகங்கள் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 10- 8 -2024 ஆம் ஆண்டு (சனிக்கிழமை ) பணி நாட்களாக செயல்படும் எனவும் அறிவிக்கபட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
