பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் முதல்வரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டால், அந்த இரு பெண் குழந்தைகளுக்கும் தலா ரூ.25 ஆயிரத்துக்கான வைப்புத் தொகை பத்திரம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை அரசு இ-சேவை மையங்கள் மூலம் அளிக்கலாம்.
முதல்வரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இரண்டாவது பெண் குழந்தை பிறந்த நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தாயின் வயது 20-ல் இருந்து 40-க்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். உரிய சான்றுகளுடன் குடும்ப அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் ஆகியவற்றுடன் அருகில் உள்ள அரசு இ-சேவை மையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு
