நாடாளுமன்றம் செல்லும் 24 இஸ்லாமியர்கள் முழு விவரம் இதோ 24 Muslim Candidates Win Lok Sabha Seats
2024 மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் போட்டியிட்ட 78 முஸ்லீம் வேட்பாளர்களில், 24 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள்
24 முஸ்லிம் வேட்பாளர்கள் இந்த முறை லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெற்றனர்
மத்தியில் பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும். மக்களவையில் தனிப்பெரும்பான்மைக்கு 32 குறைவாக உள்ள அக்கட்சி 240 இடங்களை வென்றது
2019 இல், 26 முஸ்லீம் வேட்பாளர்கள் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்,
காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலா நான்கு பேர், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சியிலிருந்து தலா மூன்று பேர், மற்றும் தேசியவாத காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து தலா ஒருவர்.
மாநிலம் வாரியாக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பட்டியல்:-
தெலுங்கானா மாநிலம்:-
ஏ.ஐ.எம்.ஐ.எம் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி தனது ஹைதராபாத் தொகுதியில் பா.ஜ.க.,வின் மாதவி லதா கொம்பெல்லாவை விட 3,38,087 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
உத்தரப் பிரதேச மாநிலம்:-
உத்தரப் பிரதேசத்தில் ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் மொஹிப்புல்லா 4,81,503 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஜியா உர் ரஹ்மான் சம்பாலில் 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.
இந்த ஆண்டு, சஹாரன்பூரில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத் 64,542 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்,
கைரானாவிலிருந்து சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் 29 வயதான இக்ரா சவுத்ரி 69,116 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளர் பிரதீப் குமாரை எதிர்த்து வெற்றி பெற்றார்.
காசிப்பூரில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அப்சல் அன்சாரி பா.ஜ.க.,வின் பார்ஸ் நாத் ராயை விட ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்,
லடாக்:-
லடாக்கில், சுயேச்சை வேட்பாளர் முகமது ஹனீபா 27,862 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்,
ஜம்மு காஷ்மீர் :-
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷித் ஷேக் என்ற இன்ஜினியர் ரஷித், 4.7 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியை எதிர்த்து 2,81,794 வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய மாநாட்டு கட்சியின் மியான் அல்தாப் அகமது வெற்றி பெற்றார்.
ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் அகா சையது ருஹுல்லா மெஹ்தி 3,56,866 வாக்குகள் பெற்றார்.
மேற்க்கு வங்க மாநிலம்:-
மேற்கு வங்க மாநிலம் பஹரம்பூர் தொகுதியில், திரினாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக முதல்முறையாக போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், 85,022 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்துள்ளார்
சந்தேஷ்காலிக்கு உட்பட்ட பாசிர்ஹாட் தொகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஹாஜி நூருல் இஸ்லாம் பா.ஜ.க வேட்பாளர் ரேகா பத்ராவை கிட்டத்தட்ட இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
உலுபெரியாவிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சஜ்தா அகமது இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க.,வின் அருணுதாய் பால்சௌத்ரியை வீழ்த்தினார்.
ஜாங்கிபூரில் திரிணாமுல் கட்சியின் கலீலுர் ரஹ்மான் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் முர்தோஜா ஹொசைன் போகுலைத் தோற்கடித்தார்.
முர்ஷிதாபாத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தியது, அபு தாஹர் கான் சி.பி.எம் கட்சியின் எம்.டி சலீமை ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்கிஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை தோற்கடித்தார்
மல்தாஹா மேற்கு தொகுதியில் காங்கிரஸின் இஷா கான் சவுத்ரி 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க.,வின் ஸ்ரீரூப மித்ரா சவுத்ரியை தோற்கடித்தார்.
லட்ச தீவு:-
லட்சத்தீவில், காங்கிரஸின் முகமது ஹம்துல்லா சயீத், தேசியவாத காங்கிரஸ் கட்சி (ஷரத்சந்திர பவார்) வேட்பாளர் முகமது பைசல் பிபியை வெறும் 2,647 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
தமிழ்நாடு மாநிலம்:-
தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யு.எம்.எல்) வேட்பாளர் நவாஸ்கனி வெற்றி பெற்றார்.
கேரளா மாநிலம்:-
பொன்னானியில், ஐ.யூ.எம்.எல் (IUML) கட்சியின் டாக்டர் எம்.பி அப்துஸ்ஸமத் சமதானி, சி.பி.ஐ(எம்) கட்சியின் கே.எஸ்.ஹம்சாவை தோற்கடித்தார்.
வடகரையில் காங்கிரஸின் ஷாபி பரம்பில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஷைலஜா டீச்சரை தோற்கடித்தார்.
மலப்புரம் தொகுதியிலும் ஐ.யூ.எம்.எல் வெற்றி பெற்றது, அங்கு இ.டி முகமது பஷீர் சி.பி.ஐ(எம்) கட்சியின் வி.வசீஃபை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
பீகார் மாநிலம்:-
காங்கிரஸின் தாரிக் அன்வர் கதிஹாரில் வெற்றி பெற்றார், ஐக்கிய ஜனதா தளத்தின் துலால் சந்திர கோஸ்வாமியை கிட்டத்தட்ட 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
கிஷன்கஞ்சில், காங்கிரஸின் முகமது ஜாவேத், ஜே.டி.(யு)வின் முஜாஹித் ஆலமை கிட்டத்தட்ட 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அசாம் மாநிலம்:-
அசாமின் துப்ரி தொகுதியில் காங்கிரஸின் ரகிபுல் ஹுசைன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பதுருதீன் அஜ்மlஐ 1012476 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்
2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற முஸ்லிம் எம்.பி.க்களின் முழுப் பட்டியல்
காங்கிரஸ்:-
துப்ரி: ரகிபுல் ஹுசைன்கிஷன்
கஞ்ச்: முகமது ஜாவேத்
கதிஹார்: தாரிக் அன்வர்
வடகரை(3): ஷாபி பரம்பில்
சஹாரன்பூர்(1): இம்ரான் மசூத்
மல்தஹா தக்ஷின்(8): இஷா கான் சவுத்ரி
லட்சத்தீவு(1): முஹம்மது ஹம்துல்லா சயீத்
சமாஜ்வாதி கட்சி
கைரானா(2): இக்ரா சவுத்ரி
ராம்பூர்(7): மொஹிப்புல்லா
சம்பல்(8): ஜியா உர் ரெஹ்மான்
காஜிபூர்(75): அஃப்சல் அன்சாரி
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி
ஜாங்கிபூர்(9): கலிலூர் ரஹாமான்
பஹரம்பூர்(10): பதான் யூசுஃப்
முர்ஷிதாபாத்(11): அபு தாஹர் கான்
பசிர்ஹத்(18): எஸ்கே நூருல் இஸ்லாம்
உலுபெரியா(26): சஜ்தா அகமது
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
மலப்புரம்(6): இ.டி. முகமது பஷீர்
பொன்னானி(7): டி.ஆர். எம்.பி அப்துஸ்ஸமது சமதானி
ராமநாதபுரம் (35): நவாஸ்கனி
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன்(AIMIM)
ஹைதராபாத்(9): அசாதுதீன் ஒவாய்சி
பாரமுல்லா(1): அப்துல் ரஷித் ஷேக்
லடாக்(1) முகமது ஹனீபா
தேசியவாத காங்கிரஸ் கட்சி
ஸ்ரீநகர்(2): ஆகா சையத் ரூஹுல்லா மெஹ்தி
அனந்த்நாக்-ராஜௌரி(3): மியான் அல்தாஃப் அஹ்மத்
Tags: அரசியல் செய்திகள்
