காரைக்காலில் வரும் 21 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
காரைக்காலில் வரும் 21 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
காரைக்காலில் வரும் 21 ஆம் தேதி மாங்கனி திருவிழா நடைபெறுவதை ஒட்டி அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள காரைக்காலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் மாங்கனித் திருவிழா காரைக்காலில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவின் போது தெருவுக்கு தெரு மாங்கனிகள் வீசப்பட்டு விழா களைக்கட்டும்.இந்நிலையில் காரைக்காலில் வரும் 21 ஆம் தேதி மாங்கனி திருவிழா நடைபெறுவதை ஒட்டி அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு உள்ளூர் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: புதுச்சேரி செய்திகள்
