Breaking News

ஜனவரி 2026க்குள் 77,000 பேருக்கு அரசு வேலை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஜனவரி 2026க்குள்  77,000 பேருக்கு அரசு வேலை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் 2026 ஜனவரிக்குள் 77,000 பேருக்கு காலியாக உள்ள அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்


சட்டப்பேரவையில், தமிழகத்தில் காலியாக உள்ள 46,534 அரசு பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 2026 ஜனவரிக்கு நிரப்பப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 110-விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை நேற்று வெளியிட்டார்.

அதில் ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 46,534 இடங்கள் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் நிரப்பப்படும். அதேபோல 17,591 காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும். காலியாக இருக்கும் பிற பணியிடங்களையும் சேர்த்து, மொத்தம் 75 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இவ்வாறு நிரப்பப்படும்’’ என்று அறிவித்தார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback