இந்திய வரலாற்றில் முதல்முறை 2024 அமைச்சரவையில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை முழு விவரம்
இந்திய வரலாற்றில் முதல்முறை 2024 அமைச்சரவையில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை முழு விவரம்
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 3 வதுமுறையாக பிரதமராக மோடி பொறுப்பெற்றுக் கொண்டார். அவருடன் 71 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த அமைச்சரவையை பொறுத்தவரை இந்திய வரலாற்றில் முதல்முறையாக முஸ்லிம் இல்லாத மத்திய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டுள்ளது.
2014 ல் முதல்முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற போது பாஜகவின் நஜ்மா ஹெப்துல்லா சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சராக பதவியேற்றிருந்தார். அந்த சமயத்திலும் அவர் ஒருவருக்கு மட்டுமே பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து 2019ல் மோடி தலைமையிலான அமைச்சரவையில், சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சராக பாஜகவின் முக்தார் அப்பாஸ் நக்வி இருந்தார். 2022ல் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி நிறைவடைந்தததை அடுத்து, அவர் மீண்டும் தேர்வு செய்யப்படவில்லை.
நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் 24 முஸ்லிம் எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
https://timesofindia.indiatimes.com/city/delhi/no-muslim-mp-in-nda-no-minister-from-community/articleshow/110855178.cms
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
