2024 மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தமிழ்நாட்டில் எந்த கட்சி எத்தனை இடங்கள் பெறும் முழு விவரம் Exit Polls 2024
2024 மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தமிழ்நாட்டில் எந்த கட்சி எத்தனை இடங்கள் பெறும் முழு விவரம் Exit Polls 2024

பிரதமர் மோடி தலைமையிலான இந்தியாவின் 17வது அமைச்சரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவு பெற்றுள்ளது.
18-வது லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற்று நடந்து முடிந்துள்ளது
முதல் கட்டமாக அருணாச்சல பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், அந்தமான், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது
இரண்டாம் கட்டமாக அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 26ம் தேதி 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது
மூன்றாம் கட்டமாக அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, ஜம்மு காஷ்மீர் ஆகிய 12 மாநிலங்களில் மே 7ஆம் தேதி 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது
நான்காம் கட்டமாக ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் மே 13ஆம் தேதி 96 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது
ஐந்தாம் கட்டமாக பீகார், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரபிரதேசம், அந்தமான், ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட 8 மாநிலங்களில் மே 25ஆம் தேதி 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
ஆறாம் கட்டமாக பீகார், ஹரியானா, ஜார்கண்ட், ஒடிசா, உ.பி., மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களில் மே 25ஆம் தேதி 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது
7ம் கட்டமாக பீகார், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா, பஞ்சாப், உ.பி., மேற்கு வங்காளம், சண்டிகர் உள்ளிட்ட 8 மாநிலங்களில் ஜூன் 1ம் தேதி 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது
கூட்டணி;-
மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் பாஜகவும், இழந்த ஆட்சியை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சியும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் மொத்தம் 28 கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றார்கள், மேலும் இந்தியா கூட்டணியில் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி , நிதிஷ் குமார் என தொடர்சியாக விலகல் ஆகி இருப்பது INDIA கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும், அந்த கூட்டணியின் மீதும் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் அம்மா மக்கள்
முன்னேற்ற கழகம் ,புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ்,இந்திய ஜனநாயக
கட்சி மற்றும் பாமக, உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது
திமுக கூட்டணி:-
தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய முஸ்லீம் லீக் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதிமுக கூட்டணி:-
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுகவுடன் தேமுதிக, புரட்சி பாரதம் கட்சி எஸ்டிபிஐ, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.
தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன
கருத்துக்கணிப்பு முடிவுகள்;-
India Today
✦ திமுக கூட்டணி ; 33 - முதல் 37 இடங்கள் வரை கைப்பற்றும்
✦ அதிமுக கூட்டணி ; 0-முதல் 2 இடங்கள் வரை கைப்பற்றும்
✦ பாஜக கூட்டணி ; 2- முதல் 4 இடங்கள் வரை கைப்பற்றும்
✦ மற்றவை ; 0-0
நியூஸ் 18 தொலைக்காட்சி
✦ திமுக கூட்டணி ; 36 - முதல் 39 இடங்கள் வரை கைப்பற்றும்
✦ அதிமுக கூட்டணி ; 0- முதல் 2 இடங்கள் வரை கைப்பற்றும்
✦ பாஜக கூட்டணி ; 1- முதல் 3 இடங்கள் வரை கைப்பற்றும்
✦ மற்றவை ; 0-0
இந்தியா முழுவதும் வெளியாகி உள்ள கருத்து கணிப்பு முடிவுகள்
LOKPOLL-MEGA வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு
பாஜக கூட்டணி 325 முதல் 335 இடங்கள் வரை கைப்பற்றும்
இந்தியா கூட்டணி 155- முதல் 165 இடங்கள் வரை கைப்பற்றும்
மற்றவை 48-முதல் 55 இடங்கள் வரை கைப்பற்றும்
Republic TV - PMARQ வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு
பாஜக கூட்டணி 359 இடங்கள் வரை கைப்பற்றும்
இந்தியா கூட்டணி 154 இடங்கள் வரை கைப்பற்றும்
மற்றவை 30 இடங்கள் வரை கைப்பற்றும்
Poll of Polls வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு
பாஜக கூட்டணி 342-முதல் 347 இடங்கள் வரை கைப்பற்றும்
இந்தியா கூட்டணி 155-முதல் 160 இடங்கள் வரை கைப்பற்றும்
மற்றவை 39-முதல் 43 இடங்கள் வரை கைப்பற்றும்
Republic Bharat - Matrize வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு
பாஜக கூட்டணி 353- முதல் 368 இடங்கள் வரை கைப்பற்றும்
இந்தியா கூட்டணி 118-முதல் 133 இடங்கள் வரை கைப்பற்றும்
மற்றவை 43-முதல் 48 இடங்கள் வரை கைப்பற்றும்
India News- D-Dynamics வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு
பாஜக கூட்டணி 371 இடங்கள் வரை கைப்பற்றும்
இந்தியா கூட்டணி 125 இடங்கள் வரை கைப்பற்றும்
மற்றவை 47 இடங்கள் வரை கைப்பற்றும்
Jan Ki Baat வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு
பாஜக கூட்டணி 362-முதல் 392 இடங்கள் வரை கைப்பற்றும்
இந்தியா கூட்டணி 141-முதல் 161 இடங்கள் வரை கைப்பற்றும்
மற்றவை 10-முதல் 20 இடங்கள் வரை கைப்பற்றும்
Agni News Services வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு
பாஜக கூட்டணி 242 இடங்கள் வரை கைப்பற்றும்
இந்தியா கூட்டணி 264 இடங்கள் வரை கைப்பற்றும்
மற்றவை 37 இடங்கள் வரை கைப்பற்றும்
TV5 Telugu வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு
பாஜக கூட்டணி 359 இடங்கள் வரை கைப்பற்றும்
இந்தியா கூட்டணி 154 இடங்கள் வரை கைப்பற்றும்
மற்றவை 30 இடங்கள் வரை கைப்பற்றும்
Tags: அரசியல் செய்திகள்
