Breaking News

அமெரிக்காவில் இந்தியரின் நகைக் கடையை கொள்ளையடித்த 20 பேர் கொண்ட கும்பல் அதிர்ச்சி வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

அமெரிக்காவில் இந்தியரின் நகைக் கடையை கொள்ளையடித்த 20 பேர் கொண்ட கும்பல் அதிர்ச்சி வைரல் வீடியோ

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகானத்தில் உள்ள இந்தியரின் நகைக்கடையில் 20 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணாத்தின், சன்னிவேலில் இயங்கிவரும் இந்தியாவில் உள்ள புனேவை தலைமையிடமாகக் கொண்ட பி.என்.ஜி. ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடையில், சுமார் 20 பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல் கடையின் கண்ணாடி கதவுகளை உடைத்து கடைக்குள் நுழைகின்றனர். 

உள்ளே நுழைந்ததும், நகைகள் வைக்கப்பட்டுள்ள மேசைகளை உடைத்து  கொள்ளையடித்துள்ளனர்.கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்புகள் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

பி.என்.ஜி. ஜுவல்லர்ஸ் புருஷோத்தம் நாராயண் என்பவரால் 1832-ல் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 192 ஆண்டுகளாக இயங்கிவரும் பி.என்.ஜி ஜுவல்லர்ஸ், மொத்தம் 35 கிளைகளுடன் இயங்கி வருகிறது. அவற்றில் 33 கிளைகள் இந்தியாவிலும், அமெரிக்காவில் ஒரு கிளையும், துபையில் ஒரு கிளையும் செயல்பட்டு வருகின்றன.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/AJEnglish/status/1802370556643135604

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback