Breaking News

சவுதி அரேபியாவில் கடும் வெப்ப அலை ஹஜ் பயணிகள் 19 பேர் உயிரிழப்பு! முழு விவரம் Heat wave kills 19 hajj pilgrims in Saudi Arabia

அட்மின் மீடியா
0

சவுதி அரேபியாவில் கடும் வெப்ப அலை ஹஜ் பயணிகள் 19 பேர் உயிரிழப்பு! முழு விவரம்

முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும்.

ஆண்டுதோறும் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணம் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரைக்காக வெளிநாடுகளில் இருந்து இதுவரை 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெக்காவில் குவிந்துள்ளனர். இதனால் மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது. 

இதற்காக சுமார் 15 லட்சம் பக்தர்கள் சௌதி அரேபியாவிலுள்ள புனித நகரமான மெக்காவில் திரண்டுள்ளனர். இந்த ஆண்டு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



இந்த நிலையில் சௌதி அரேபியாவில் நிலவும் கடும் வெப்ப அலையால் ஹஜ் புனிதப் பயணிகள் மேற்கொண்ட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களில் 14 பேர் ஜோர்டனைச் சேர்ந்தவர்கள் எனவும், 5 பேர் ஈரானைச் சேர்ந்தவர்கள் எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

புனிதப் பயணம் சென்றுள்ள சுமார் 2,760 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. எனவே, பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback