Breaking News

நீட் தேர்வு கருணை மதிப்பெண் ரத்து 1,563 மாணவர்களுக்கு ஜூன் 23-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் தேசிய தேர்வு முகமை

அட்மின் மீடியா
0

நீட் தேர்வு கருணை மதிப்பெண் ரத்து 1,563 மாணவர்களுக்கு ஜூன் 23-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் தேசிய தேர்வு முகமை 

நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வில், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி என பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது, இந்த வழக்கில்

நீட் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை  தெரிவித்துள்ளது.

மேலும், அந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படுவதாகவும், விருப்பமுள்ள மாணவர்கள் மறுதேர்வு எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுத விருப்பம் இல்லாத மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் சேர்க்காமல் பழைய மதிப்பெண்ணே தொடரும் எனவும் ஜூன் 23-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்றும், 30-ஆம் தேதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.


Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback