Breaking News

13 வயது சிறுமி அமீபிக் வைரஸ் தாக்கி உயிரிழப்பு... கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

அட்மின் மீடியா
0

கேரள மாநிலம் கண்ணூர் தோட்டா பகுதியில் வசித்து வருபவர் ராகேஷ் பாபு. இவரது மனைவி தன்யா. இவர்களது 13 வயது மகள் தக்சினா. 8ம் வகுப்பு படித்து வருகின்றார்



தக்சினாவுக்கு கடந்த வாரம் திடீரென தலைவலி மற்றும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரது உடல்நிலை மோசமடைந்ததால், கோழிக்கோட்டில் உள்ள பேபி மெமோரியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சில நாட்களுக்கு முன்பு தக்சினா பரிதாபமாக உயிரிழந்தார். 

தக்சினாவுக்கு அரிய வகை அமீபிக் என்செபாலிடிஸ் நோய்த் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. அவரது முதுகுத்தண்டு திரவத்தை பரிசோதித்ததில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறுமி தக்சினா, மூணாறுக்கு பள்ளி பயணம் சென்றபோது குளத்தில் குளித்தபோது இந்த நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback