தமிழகம் முழுவதும் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் முழு விவரம்
தமிழகம் முழுவதும் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் முழு விவரம்
இதுகுறித்து அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட உத்தரவு:
தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் ரீட்டா ஹரீஷ் தாக்கர், பொதுத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கே.நந்தகுமார், மனிதவள மேலாண்மைத்துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் எஸ்.நாகராஜன், நிதித்துறை செலவினப்பிரிவு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிஜிதாமஸ் வைத்யன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு வீட்டுவசதித்துறை மேலாண் இயக்குநர் இ.சரவணவேல்ராஜ், புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்க்கரைத்துறை ஆணையர் சி.விஜயராஜ்குமார், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்க்கரைத்துறை கூடுதல் ஆணையர் டி.அன்பழகன், சர்க்கரைத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் பணிகள் பிரிவு இணை ஆணையர் ஜி.எஸ்.சமீரன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாநகராட்சி ஆணையர் வி.சிவகிருஷ்ணமூர்த்தி, சென்னைமாநகராட்சியின் பணிகள் பிரிவு துணைஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புவியியல், சுரங்கத்துறை ஆணையர் பூஜாகுல்கர்ணி, தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் கூடுதல் ஆட்சியர் மற்றும் டிஆர்டிஓ திட்ட அதிகாரியான பி.அலர்மேல்மங்கை, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவன செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் சாகோசர்வ் மேலாண் இயக்குநர் லலித்தாதித்யா நீலம் சேலம் கூடுதல் ஆட்சியர் மற்றும் டிஆர்டிஓ திட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
