Breaking News

கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் சட்ட திருத்தம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் சட்ட திருத்தம் முழு விவரம்

கள்ளச்சாராயம் தயாரிப்பவர்களுக்கு ஆயுட்காலம் வரை கடுங்காவல் தண்டனையோடு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் அமைச்சர் முத்துசாமி

கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம்

தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் - 1937ன்படி விதிகளை மீறி மது இறக்குமதி, ஏற்றுமதி செய்வதற்கு தண்டனை வழங்கப்படுகிறது

கள்ளச்சாராய விற்பனைக்காக பயன்படுத்தப்படும் அனைத்து அசையும், அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்

மது அருந்தப் பயன்படுத்தப்படும் உரிமை இல்லாத இடங்கள் மூடி சீலிடப்படும்

விஷச் சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் அதை தயாரிப்பது விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, ₹10 லட்சம் ரூபாய் வரை தண்டனை தொகையை உயர்த்தி கடுமையான தண்டனைகளையும் விதிப்பதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback