Breaking News

நடைபயிற்சி சென்ற பெண்ணை கடித்து குதறிய 10 நாய்கள் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

நடைபயிற்சி சென்ற பெண்ணை கடித்து குதறிய 10 நாய்கள் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ

ஹைதராபாத்தில் நேற்று காலை சாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட பெண் ஒருவரை சுமார் 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் தாக்கின. 

ஆந்திர மாநிலம் ஹைதரபாத்தில் உள்ள மணிகொண்டாவில் உள்ள சித்ரபுரி மலைப்பகுதியில்  சாலையில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த பெண் ஒருவரை 15 தெரு நாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்த சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது. 

வைரல் ஆகும் வீடியோவில் சுமார் 15 நாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்து குதறுகின்றது ,இதனால் நிலைகுலைந்த அப்பெண், கீழே விழுகிறார். பின்னர் காலில் உள்ள ஒரு செருப்பை பயன்படுத்தி வீரத்துடன் போராடி நாயை துரத்துகின்றார்

இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அப்பெண்ணின் கணவர், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் அபாயத்தைக் குறைக்க, காலனி வளாகத்திற்குள் தெரு நாய்களுக்கு உணவளிப்பதை நிறுத்துமாறு குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளார். நல்வாய்ப்பாக என் மனைவி உயிர் பிழைத்தாள், இந்த தெருநாய்களால் சிறு குழந்தைகள் இதே போன்ற தாக்குதல்களை எதிர்கொண்டால் என்ன செய்வது? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/sudhakarudumula/status/1804517453906715070

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback