Breaking News

மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 தமிழ்ப் புதல்வன் திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அட்மின் மீடியா
0

மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 தமிழ்ப் புதல்வன் திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு



மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைப்பெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பணிகளை மிகச்சிறப்பாகக் கையாண்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். கோடை காலத்தில், குடிநீர் பிரச்சினை மற்றும் மின்வெட்டு ஆகியவை ஏற்படாமல் கவனமாக கையாண்டதற்காக நன்றி என கூறிய தமிழக முதல்வர் மேலும் அடுத்தடுத்து இன்னும் பல திட்டங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். புதுமைப் பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ என்கிற திட்டம் தொடங்கப்பட உள்ளது. 

இதுபோன்ற திட்டம் தான் தமிழகத்தின் இளைய சக்தி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் திட்டங்கள்.சென்னை மக்களே உஷார்.. இரவில் மழை இருக்காம் - வானிலை அலெர்ட்இதுபோன்ற திட்டங்களில் ஆட்சியர்கள் தங்களது கவனத்தைச் செலுத்த வேண்டும் அடுத்த இரண்டு ஆண்டுகள் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் மிக முக்கியமானவை. புதிய உத்வேகத்துடன் மக்கள் நலப்பணிகளை சிறப்பாகச் செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது” என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பொருளாதார சிக்கல்களின் காரணமாக 12ஆம் வகுப்பு முடிந்தவுடன் அவர்களின் மேற்படிப்பை தொடர  மாதம் 1000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது

அதைபோல், 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் 'புதுமைப்பெண்' திட்டத்தை போல் மாணவர்களுக்கும் 'தமிழ் புதல்வன்' திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்திருந்தார்

அதன்படி, 6 -ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி சேரும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் என அவர்களது கல்வியை மேம்படுத்த உதவி செய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்ட 'தமிழ் புதல்வன்' என்ற திட்டத்தில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.அந்த வகையில், தற்போது தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள், "மாணவிகளுக்கு 'புதுமைப்பெண்' திட்டம் போல் இனிமாணவர்களுக்கு 'தமிழ் புதல்வன்' திட்டம் தொடங்கப்பட உள்ளது. மேலும் வரும் நாட்களில் இன்னும் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுத்த உள்ளோம்." என்று அறிவித்துள்ளார். 

தமிழக முதல்வர் அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/mkstalin/status/1800518328672268728

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback