TN43 வாகனங்கள் ஊட்டி செல்ல இ- பாஸ் தேவையில்லை ! வட்டார போக்குவரத்து கழகம் அறிவிப்பு
ஊட்டி, கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த இபாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனவும் மே 7 முதல் ஜூன் 30 வரை இபாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனவும் உள்ளூர் மக்களுக்கு இதற்கு விலக்கு அளிக்க வேண்டும். என நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்
இந்நிலையில் உதக மண்டலம் வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி 07.05.2024 முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் "e" பாஸ் பெற்றே வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் நீலகிரி மாவட்ட பதிவு எண் "TN 43" பெற்றிருந்தால் அந்த வாகனங்களுக்கு "e" பாஸ் தேவையில்லை.
வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களை வாங்கி நீலகிரி மாவட்டத்தில் உரிமை மாற்றம் செய்திருக்கும் பொதுமக்கள் வாகனத்தின் அசல் வாகன பதிவுச்சான்று, காப்புச்சான்று மற்றும் நடப்பிலுள்ள புகைச்சான்று ஆகியவற்றுடன், உதகை வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தை அணுகினால், ஆவணங்களை சரிபார்த்து உதகை வட்டடாரப்போக்குவரத்து அலுவலகத்தால் "e" பாஸ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்
