SETC பேருந்துகளில் டிக்கெட் எடுக்க யுபிஐ வசதி இன்று முதல் அமல்
SETC பேருந்துகளில் டிக்கெட் எடுக்க யுபிஐ வசதி இன்று முதல் அமல் பேருந்து பயணங்களின் போது டிக்கெட் எடுக்க சில்லறை என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது.
தற்போது பெரும்பாலும் வங்கி கணக்கு, GPay, Phonepe என பண பரிவர்த்தனைகள் டிஜிட்டல் மையமாக உள்ளது.இப்படியிருக்கையில் சரியான சில்லறை கொடுக்க வேண்டும் என்றால் நடத்துனர்களுக்கு பயணிக்களுக்கு பிரச்சனை உருவாகுகிறது. இந்நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் யுபிஐ மூலம் டிக்கெட் பெறும் வசதி இன்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது
அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 1,068 பேருந்துகளிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெபிட், கிரெடிட் கார்டுகள், ஜி-பே, போன்-பே போன்ற யுபிஐ பரிவர்த்தனை மூலமும் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 1068 பேருந்துகளிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்
