Breaking News

கலைஞரின் கனவு இல்லம் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு Kalaignarin Kanavu Illam Scheme 2024

அட்மின் மீடியா
0
கலைஞரின் கனவு இல்லம் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு Kalaignarin Kanavu Illam Scheme 2024 



கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தில் ரூ.3,100 கோடி மதிப்பில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

2024-25ம் நிதியாண்டில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் 1 லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கி, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள்:

வீட்டின் குறைந்தபட்ச பீடம் பகுதி சமையலறை உட்பட 360 சதுர அடியாக இருக்க வேண்டும், 

அதில் 300 சதுர அடி ஆர்சிசி கூரையால் மூடப்பட்டிருக்க வேண்டும்

தீப்பிடிக்காத பொருளில் அமைக்கப்பட்ட கூரையாக இருக்க வேண்டும் (பயனாளிகளின் விருப்பத்துக்கேற்ப)ஓலை அல்லது அஸ்பெஸ்டாஸ் கூரைகள் அமைக்கப்படக்கூடாது

வீட்டின் சுவர்கள், செங்கல், இன்டர்லாக் பிரிக், ஏஏசி பிளாக் உள்ளிட்டவற்றால் கட்டப்பட்டிருக்க வேண்டும்மண்ணால் கட்டப்படும் சுவர்கள் கூடாது

ஒவ்வொரு வீட்டிற்கும் யூனிட் காஸ்ட் உதவியாக ஒருங்கிணைக்கும் தொகையும் சேர்த்து ரூ.3.50 லட்சம் வழங்கப்படும்.

கிராம ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், உள்ளிட்டோர் அடங்கிய குழு இத்திட்டத்திற்கு தகுதியான பயனாளியை தேர்வு செய்ய வேண்டும்

மலைப்பாங்கான பகுதிகளில் பயனாளிகளின் விருப்பப்படி கூரை அமைக்கலாம்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback