Breaking News

மின்சாரம் தாக்கியதில் செயலிழந்த சிறுவனின் இதயம் CPR மூலம் உயிரை மீட்ட மருத்துவர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

மின்சாரம் தாக்கியதில் செயலிழந்த சிறுவனின் இதயம் CPR மூலம் உயிரை மீட்ட மருத்துவர் வைரல் வீடியோ

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள அய்யப்பா நகரில் 6 வயது சிறுவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மின்கம்பத்தின் கீழ் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான். இதயம் நின்று மூச்சு விட முடியாமல் சாலையில் கிடந்த சிறுவனைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். 


அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டனர்.அப்போது அவ்வழியாக வந்த பெண் மருத்துவர் ரவேலி, சிறுவனுக்கு நாடித் துடிப்பு, இதயத்துடிப்பு இருக்கிறதா என்று பரிசோதித்தார். சாலையிலேயே CPR சிகிச்சை கொடுத்து ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு,சிறுவன் மீண்டும் சுவாசிக்க ஆரம்பித்தான்.பின்னர் சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு 24 மணிநேர கண்காணிப்புக்குப் பிறகு, சிறுவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான்.பெண் மருத்துவர் சிறுவனின உயிரை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய பெண் மருத்துவரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக்இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/TeluguScribe/status/1791401327752347677

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback