Breaking News

சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்த கடைக்கு சீல் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்! முழு விபரம்

அட்மின் மீடியா
0

சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!!

சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்த கடைக்கு சீல் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!



இந்திய உணவுச் சட்டம் 2006ன் படி, தாய்ப்பாலை பதப்படுத்துவதையும், விற்பனை செய்வதையும் தடை செய்யப்பட்டுள்ளது.தாய்ப்பால் சுரக்காத தாய்மார்களுக்கு உதவும் வகையில், அரசு சார்பில் தாய்ப்பால் வங்கிகள் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில், சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த முத்தையா என்பவர், சட்டவிரோதமாக பாட்டில்களில் அடைத்து தாய்ப்பால் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

சென்னை மாதவரம் கே.கே.ஆர் கார்டன் பகுதியில் செம்பியன் முத்தையா என்பவரின் கடையில், 50க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் தாய்ப்பால்கள் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, அனைத்து பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், நடத்திய விசாரணையில், புரதச்சத்து மருந்தகள் விற்பனை செய்ய மட்டுமே கடைக்கு உரிமம் தரப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்தது தெரியவந்தது. 

தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.சென்னை மாதவரத்தில், சட்டவிரோதமாக பாட்டில்களில் தாய்ப்பால் விற்பனை செய்த முத்தையா என்பவரது கடையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், 50க்கும் மேற்பட்ட பாட்டில்களில் தாய்ப்பால் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback