Breaking News

இரவை பகலாக்கிய விண்கல் - ஸ்பெயின் நாட்டில் விழுந்த விண்கல் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

இரவை பகலாக்கிய விண்கல் - ஸ்பெயின் நாட்டில் விழுந்த விண்கல் வைரல் வீடியோ 

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளுக்கு இடையேயான வானத்தை ஒரு மாபெரும் விண்கல் கடக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.விண்கல் காரணமாக பிரகாசமான நீல ஒளியால் ஒளிரும் வானம் இரவை பகல் போன்று மாற்றியது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சனிக்கிழமை இரவு ஸ்பெயின் மற்றும் அதன் அண்டை நாடான போர்ச்சுகலின் வானை மிளிர செய்த விண்கல் பொழிவு மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

திடீரென இந்த விண்கல் பொழிவு ஏற்பட்டதால் அந்த இரு நாடுகளிலும் வசிப்பவர்களுக்கு இது பெரும் ஆச்சர்யமாக இருந்ததுடன், அவர்களுக்கு இது மாபெரும் வாழ்நாள் அனுபவத்தை வழங்கியது

இந்த திகைப்பூட்டும் விண்கல் காட்சியைக் கண்ட மக்கள் அதை தங்கள் கேமராக்களில் படம்பிடித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.

போர்ச்சுகலில் தென்பட்ட விண்கல் துகள்கள், அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்திருக்கக் கூடும் எனவும் விஞ்ஞானிகள் தற்போது கணித்திருக்கின்றனர்.

பெரிய அளவிலான விண்கற்களோ, வால் நட்சத்திரமோ பூமியின் மீது மோதினால் மட்டுமே மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என விளக்கம் அளிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

நாசாவின் கூற்றுபடி, "விண்ணில் உள்ள கற்கள் பூமியின் வளிமண்டலத்துக்குள் வேகமாக நுழைந்து எரியும் அந்த நெருப்புக்கோளம் அல்லது எரிநட்சத்திரம் விண்கற்கள்" என்று அழைக்கப்படுகின்றன. விண்வெளி பாறைகள், பெரிய அளவிலான தூசுகள், சிறுகற்கள் போன்றவை எரியும் போது அவ்வாறு ஒளி உண்டாகிறது.

அதாவது பூமியிலிருந்து 60 முதல் 80 கிலோ மீட்டர் உயரத்தில் இருப்பதுதான் MESOSPHERE) எனப்படும் பகுதி. இதன் அருகே விண்கற்கள் வரும்போது உராய்வு காரணமாக விண்கற்கள் எரிந்து துண்டு துண்டாக சிதறுகின்றன. பூமியின் வளிமண்டலம் விண்கற்களை, பூமியின் மேற்பரப்பில் விழாமல் அந்த அளவுக்கு பாதுகாக்கிறது. சில நேரங்களில் வளிமண்டலத்தின் மேற்பகுதியில் விழும் விண்கற்கள், துண்டு, துண்டாக உடைந்து புவி ஈர்ப்பு விசை காரணமாக, பூமியை நோக்கி இழுக்கப்படும். அப்போது பூமியின் தரைமட்டத்தில் இருந்து 20 முதல் 30 கிலோ மீட்டர் உயரத்தில் உடைந்த அந்த விண்கல் பகுதிகள் பயணிக்கும்போது, உராய்வு காரணமாக ஒளிக்கீற்றுகள் உண்டாகின்றன.

விண்கல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்ய இங்கு கிளிக் செய்ய

https://x.com/CollinRugg/status/1791997578097389807

விண்கல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்ய இங்கு கிளிக் செய்ய

https://x.com/tylerduran21/status/1792000073963905442

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback