காஸா போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் முழு விவரம்
காஸா போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் முழு விவரம்
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
காசாவின் தெற்கு முனையில் உள்ள ரபா நகரில், தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது.இந்நிலையில் இஸ்ரேல் உடனான தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளது.
சுமார் 7 மாதங்களாக நடந்து வந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான
ஒப்பந்தம் ஒன்றை எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் இணைந்து முன்மொழிந்தன.
இதனை ஹமாஸ் அமைப்பு இன்று ஏற்று கொண்டுள்ளது.
மேலும் காசாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் திரும்ப பெறுவதற்கு ஈடாக, ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருக்கும் பணய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த அறிவிப்பால் பாலஸ்தீனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags: வெளிநாட்டு செய்திகள்
