Breaking News

இலங்கை அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு முழு விபரம்

அட்மின் மீடியா
0

இலங்கை அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு முழு விபரம்

                                

வருகிற 'செப்டம்பர் 17' தொடங்கி அடுத்த 30 நாட்களுக்குள் அதிபர் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என இலங்கை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பிலும், 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சனாதிபதித் தேர்தல்கள் சட்டத்திலும் காட்டப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமைய சனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கு உரிய காலப்பகுதியினுள் பெயர்குறித்த நியமனம் கோரப்படும் என்பதும், தேர்தலை நடாத்துவதற்கான திகதியைக் குறிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு உரித்தாக்கப்பட்ட தத்துவங்களுக்கு அமைய 2024 செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கும் 2024 அக்டோபர் மாதம் 16 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தினுள் தேர்தல் நடாத்தப்படுமென்பதும் இத்தால் அறிவிக்கப்படுகின்றது

இலங்கையில் கடந்த 2022ல் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக புரட்சி வெடித்தது. இதனையடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். 

அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். இந்த நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேயின் பதவிக்காலம் இந்தாண்டு முடிவடையும் நிலையில் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் 225 இடங்களைக் கொண்டுள்ளது. அந்நாட்டில் ஒருவரை அதிபராக தேர்வு செய்ய பெரும்பான்மை எண்ணிக்கையான 113 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.

இந்த தேர்தலில் 5 பேர் நிற்கின்றனர். அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே, சமகி ஜன பாலவேகயா கட்சியின் தலைவர் சஜித் பிரேமதசா, இலங்கை சுதந்திர கட்சியின் விஜேயதாச ராஜபக்சே, தேசிய மக்கள் சக்தி கட்சியின் அனுரா குமார திசனாயகே, சுயேட்சையாக ஜனகா ரத்னயகே ஆகியோர் ஆவர்.

Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback