Breaking News

தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கத்தால், பள்ளிகள் திறப்பு ஜுன் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

6ம் தேதி திறக்கப்படும் என முன்பு கூறப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தால் 4 நாட்கள் கழித்து திறக்கப்படுகிறது

கோடை மழையின் காரணமாக கத்திரி வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், கடந்த சில நாட்களாக வெப்பம் மீண்டும் அதிகரித்து வருகிறது. 

புதுச்சேரியில் வரும் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு ஜூன் 12-ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கத்தால், பள்ளிகள் திறப்பு ஜுன் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 6ம் தேதி திறக்கப்படும் என முன்பு கூறப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தால் 4 நாட்கள் கழித்து திறக்கப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback