Breaking News

முஸ்லீம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு திரும்பிய இசையமைப்பாளர் ஜிப்ரான் முழு விவரம்

அட்மின் மீடியா
0

முஸ்லீம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு திரும்பிய இசையமைப்பாளர் ஜிப்ரான் முழு விவரம்

தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இசையமைப்பாளர் ஜிப்ரான் இஸ்லாம் மதத்திலிருந்து மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பி தன் பெயரையும் மாற்றியுள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு வெளியான வாகை சூடவா படம் மூலம் இசையமைப்பாளர் ஆனவர் ஜிப்ரான். இதையடுத்து குட்டி புலி, திருமணம் எனும் நிக்காஹ், அமர காவியம், உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம், தீரன் அதிகாரம் ஒன்று, விஸ்வரூபம் 2, ஆண் தேவதை, ராட்சசன், கடாரம் கொண்டான், துணிவு, தலைநகரம் 2 உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். 



இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் நான் இஸ்லாம் மதத்தை பின்பற்றி கொண்டு இருந்தேன். ஆனால் கடைசி நான்கு வருடங்களாக மறுபடியும் இந்துவாக மாறிவிட்டேன். சட்டப்பூர்வமாகவும் அனைத்து மாற்றங்களும் செய்துவிட்டேன். மேலும் என் அப்பாவின் பெயர் கணேஷ் பாலாஜி வைபோதா. வைபோதா என்றால் விழித்தெழுதல் என அர்த்தம். 

தற்போது மதம் மாறிவிட்டதால் என் அப்பாவின் பெயரை என் பெயருடன் சேர்த்துவிட்டேன். இனி நான் இசையமைக்கும் படங்களில் ஜிப்ரான் வைபோதா என்று தான் பெயர் வரும் என்றார்.இதுவரை தன்னுடைய படங்களில் ஜிப்ரான் என்கிற பெயரை மட்டும் பயன்படுத்தி வந்த அவர், குரங்கு பெடல் படத்தில் ஜிப்ரான் வைபோதா என தன்னுடைய புது பெயரை போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags: மார்க்க செய்திகள்

Give Us Your Feedback