Breaking News

உலகம் முழுவதும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளை திரும்பப் பெறுகிறது ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம்! முழு விவரம்

அட்மின் மீடியா
0

உலகம் முழுவதும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளை திரும்பப் பெறுகிறது ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம்! முழு விவரம்


கடந்த 2019 இல் உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்று மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. 

கொரோனா பாதிப்பில் இருந்து நாம் மீண்டு வர கொரோனா தடுப்பூசி முக்கிய காரணமாக இருந்தது. கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கண்டுபிடித்தன. இதில் இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழகம் இணைந்து கொரானா தடுப்பூசியை உருவாக்கின.இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது. 

அஸ்டாரஜெனெகா தடுப்பூசியால் உயிரிழப்புகளும் பக்க விளைவுகளும் ஏற்படுவதாக பிரிட்டன் நீதிமன்றத்தில் 51 பேர் வழக்கு தொடர்ந்தனர், அதில் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதால் ரத்த உறைவு போன்ற பக்க விளைவுகளை எதிர்கொண்டதாக கூறியிருந்தனர்.

இந்நிலையில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் கோர்ட்டில் அளித்த ஆவணத்தில், கோவிட் தடுப்பூசி ஒரு அரிய பக்க விளைவை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டதாக பிரிட்டனின் தி டெலிகிராப் ஊடகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி அரிதான சந்தர்ப்பங்களில், ரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கைக்கு (டி.டி.எஸ்.) வழிவகுக்கும் நிலையை ஏற்படுத்தும். ஆனால் இது மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே நடக்கும். எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலகளவில் தங்கள் கொரோனா தடுப்பூசிகளை திரும்ப பெறுவதாக ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது

NEWS SOURCE

https://www.reuters.com/business/healthcare-pharmaceuticals/astrazeneca-withdraw-covid-vaccine-worldwide-telegraph-reports-2024-05-07/

Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback