திறந்தநிலை பல்கலை சான்றிதழ் மூலம் தமிழக அரசின் வேலைவாய்ப்பை பெற முடியாது என்ற அரசானைக்கு இடைக்கால தடை சென்னை உயர்நீதிமன்றம்
திறந்தநிலை பள்ளி சான்றிதழ் மூலம் தமிழக அரசின் வேலைவாய்ப்பை பெற முடியாது என தமிழக அரசு 2023 டிசம்பரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தேசிய திறந்த நிலை பள்ளி மாணவர்கள் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கில் இடைக்கால தடை விதித்து தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
தேசிய திறந்தநிலைப் பள்ளியில் படித்து பெறும் சான்றிதழ்கள் தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புக்கோ, பதவி உயர்வுக்கோ செல்லாது என அறிவித்து தமிழக அரசு கடந்த 2023 டிசம்பர் 21 ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து தேசிய திறந்தநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் திருவள்ளூரைச் சேர்ந்த விஷ்ணு, சந்தோஷ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.தேசிய திறந்தநிலைப்பள்ளி நிறுவனம் அளிக்கும் படிப்பு சான்று தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புக்கு செல்லாது என்ற அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து, மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமி நாதன் உத்தரவிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
