டோல் கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி ஊழியர் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி வைரல் வீடியோ
டோல் கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி ஊழியர் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி வைரல் வீடியோ
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச் சாவடி ஊழியர்களை, கட்டணம் செலுத்தாமல் செல்லும் வாகன ஓட்டிகள் காரை வைத்து ஏற்றி கொல்ல முயலும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் மத்திய அரசுக்கு சொந்தமான சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது.
சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் கார் ஒன்று கடந்து செல்லமுயன்றது.அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் கட்டணம் செலுத்தாமல் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தினர். அப்போது காரில் இருந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு அவசரமாக செல்லவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் ஊழியர் காரை விட மறுத்ததால், அதன் டிரைவர் சுங்கச்சாவடி ஊழியர் மீது காரை மோதினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/SparkMedia_TN/status/1787735320164728856
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ
