ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் உடல் மீட்கப்பட்டு கொண்டு செல்லும் வீடியோ வெளியீடு
ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் உடல் மீட்கப்பட்டு கொண்டு செல்லும் வீடியோ வெளியீடு
அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் உடன் இணைந்து இருநாட்டு முயற்சியில் கட்டப்பட்ட ஒரு அணையைத் திறப்பதற்காக அஜர்பைஜானுடனான ஈரானின் எல்லைக்கு ரைசி சென்று இருந்தார்.அங்கிருந்து திரும்பி வந்த போது ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர், நேற்று இரவு 8 மணியளவில் தரையிறங்கும் போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகின. அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஹுசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் சில அரசு செயலாளர்கள் ஹெலிகாப்டரில் சென்றனர்.
விபத்து நடந்த இடம் மலைப்பகுதி என்பதாலும் அதிக பனிமூட்டமாக இருந்ததாலும் மீட்புப்பணிகளில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணம் தப்ரிஸ் நகர் டவில் கிராமம் அருகே உள்ள மலைப்பகுதியில் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது. மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதற்கான ஆதாரங்களை துருக்கி ஆளில்லா விமானம் கண்டுபிடித்தது
இதையடுத்து அப்பகுதிக்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்றனர். அங்கு இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது உறுதியாகியுள்ளது.
மலைப்பகுதியில் ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிபர் இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டரில் இருந்த யாரும் உயிருடன் இருப்பதற்கான "அறிகுறி எதுவும் இல்லை" என்று ஈரான் அரசு தொலைக்காட்சி கூறுகிறது.
விபத்தில் ஹெலிகாப்டர் "முற்றிலும் எரிந்துவிட்டது" என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது."விபத்தில் அதிபர் ரைசியின் ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்து விட்டது. துரதிர்ஷ்டவசமாக, அனைத்து பயணிகளும் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது," என்று செய்திகள் வெளியாகி உள்ளது
இந்நிலையில், இப்ராகிம் ரைசியின் மறைவைத் தொடர்ந்து, இடைக்கால அதிபராக தற்போதைய துணை அதிபர் முகமது முக்பர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் உடல் மீட்கப்பட்டு கொண்டு செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது
வீடியோ பார்க்க இங்கு கிளிக்இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/galamiou/status/1792450851577237911
Tags: வெளிநாட்டு செய்திகள்
