ஆகாஷ் ஆனந்தை அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்ப பெற்றார் மாயாவதி
மருமகன் ஆகாஷ் ஆனந்தை அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்ப பெற்றார் மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான மாயாவதி தனது அரசியல் வாரிசாக தனது சகோதர் ஆனந்த் குமாரின் மகன் 28 வயதான ஆகாஷ் ஆனந்த் என கடந்த ஆண்டு அறிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்த மாயாவதி (வயது 67) திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில் மாயாவதி தனது அரசியல் வாரிசாக ஆகாஷ் ஆனந்தை அறிவித்த்திருந்தார்
இந்நிலையில் ஆகாஷ் ஆனந்தை அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்ப பெற்றார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி.
மேலும் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
ஆகாஷ் அரசியலில் முதிர்ச்சி அடையும் வரை கட்சிப் பதவியில் இருந்து நீக்கி வைப்பதாகவும், கட்சியின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் X பக்கத்தில் மாயாவதி விளக்கம் அளித்துள்ளார்
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
