தூய்மைப்பணி மேற்கொள்ளாததை புகார் கூறிய இளைஞரை தாக்கிய கவுன்சிலர் கணவர் வீடியோ இணைப்பு
மேட்டுப்பாளையம் நகராட்சி, 23வது வார்டு பகுதியில் தூய்மைப்பணி மேற்கொள்ளாததை பற்றி புகார் கூறிய இளைஞரை தாக்கிய காங்கிரஸ் கவுன்சிலர் கவிதாவின் கணவர் புருஷோத்தமன்
இளைஞருக்கு கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் இதுதொடர்பான வீடியோ தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது.
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளைம் நகராட்சி உள்ளது. இந்த நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் 23வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் கவிதா. இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்
கவிதாவின் வார்டின் சில இடங்களில் சரிவர தூய்மை பணிகள் மேற்கொள்ளாதால் தெருக்கள் சுத்தமின்றி குப்பையாக காட்சியளித்துள்ளது.
அதேபகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஏரியாவை சுத்தமாக வைக்க வேண்டும். அதற்கு தூய்மை பணி செய்ய வேண்டும்'' என வாலிபர் கூறுகிறார்.
அதற்கு கவுன்சிலர் கவிதா, அப்படியெல்லாம் செய்ய முடியாது என கூறி வாக்குவாத, நீள்கின்றது திடீரென கவுன்சிலர் கவிதாவின் கணவர் இளைஞரை ஓங்கி கழுத்தில் தாக்குகின்றார் இதில் தரையில் பொத்தென விழுந்த வாலிபரின் கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது அந்த வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் வாலிபரிடம் காங்கிரஸ் கவுன்சிலர் கவிதா வாக்குவாதம் செய்வதும், கவிதாவின் கணவர், வாலிபரை தாக்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/IeTamil/status/1796240431765930230
Tags: தமிழக செய்திகள்
