Breaking News

பெண் குழந்தைகளை கொடூரமாக தாக்கும் தந்தை என பரவும் வீடியோ உண்மை என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

பெண் குழந்தைகளை கொடூரமாக தாக்கும் தந்தை என பரவும் வீடியோ உண்மை என்ன முழு விவரம்

மதுபோதையில் பெண் குழந்தைகளைத் தந்தை கொடூரமாக தாக்குவதாக கூறி தமிழ்நாடு காவல்துறையை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகிறது.




உண்மை என்ன?

இந்த சம்பவம் ஆந்திர பிரதேச மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்தது. குழந்தைகளை தாக்கிய தந்தையின்மீது அம்மாநில காவல்துறை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதுடன், குழந்தைகளை மீட்டு தாயிடம் ஒப்படைத்துள்ளது

காணொளி குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.

அதில் மதுபோதையில் பெண் குழந்தைகளைத் தந்தை கொடூரமாக தாக்குவதாக கூறி தமிழ்நாடு காவல்துறையைக் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

இந்தச் சம்பவம் ஆந்திர பிரதேச மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்தது. குழந்தைகளைத் தாக்கிய தந்தையின்மீது அம்மாநில காவல்துறை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் குழந்தைகளை மீட்டு தாயிடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். எனவே வதந்திகளை நம்பாதீர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக உண்மை சரிபார்க்கும் குழு அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/tn_factcheck/status/1789948594386006090

Tags: FACT CHECK

Give Us Your Feedback