Breaking News

மத வழிபாட்டு தலங்களுக்கு மின் கட்டணத்தில் பாகுபாடு என் பரவும் செய்தி உண்மை என்ன

அட்மின் மீடியா
0

மத வழிபாட்டு தலங்களுக்கு மின் கட்டணத்தில் பாகுபாடு என் பரவும் செய்தி உண்மை என்ன



பரவிய செய்தி:-

தமிழகத்தில் நமது முதல்வரின் சிறப்பான ஆட்சியில் மதசார்பின்மை மிக சிறப்பாக உங்களுக்கு புரியும் வகையில் சில விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ளும் பொழுது உங்களுக்கு அடடா இவ்வளவு சிறப்பாக ஒரு கண்ணுக்கு வெண்ணையும் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் தமிழகத்தில் தரப்படுகிறது என்று ஆச்சரியப்படுவீர்கள்.*சாதாரண குடிமகனின் மின்சாரக் கட்டணம்**யூனிட்டுக்கு ரூ.7.85.**முஸ்லீம்களின் மசூதிக்கு யூனிட்டுக்கு ரூ.1.85**கிருஸ்த்தவர்களின் சர்ச்க்கு ரூ.1.85**ஆனால் இந்துக்களின் கோவிலுக்கு மட்டும் யூனிட்டுக்கு ரூ.7.85,**கௌ ஷாலா யூனிட்டுக்கு ரூ.7.85.**இது நமது மதசார்பற்ற இந்தியா.**இது ஒரு வித்தியாசமான உறவு.** *மசூதி தனியார் சொத்தாக இருந்தாலும், மதகுருமார்களுக்கு அரசாங்கம் ஏன் சம்பளம் கொடுக்கிறது?** *சர்ச் தனியார் சொத்து இருந்தாலும் father க்கு ஏன் அரசாங்கம் சம்பளம் தருகிறது?** *கோவில் அரசுக்கு சொந்தமாக இருந்தும்** **ஏன் அர்ச்சகருக்கு அரசு சம்பளம் கிடைக்கவில்லை?*இதில் இன்னும் ஒரு ஆச்சரியம் மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் வரும் வருமானத்தில் அரசுக்கு ஒரு பைசா கூட கிடைக்காது ஆனால் கோவில்களில் வரும் நேரடி வருமானம் மற்றும் கோவில் சொத்துக்களை வைத்து கிடைக்கும் வருமானம் என்று அனைத்தும் அது தவிர இந்து மக்கள் இந்து கோவில்களில் அவர்களின் நேர்த்திக் கடன்களை செலுத்துவதற்கு அரசு கட்டணம் வசூலிக்கிறது அதாவது உங்களை நம்பிக்கையை தெய்வத்திடம் சமர்ப்பிக்க நீங்கள் அரசுக்கு பணம் செலுத்த வேண்டும் என்ற ஒரு உயர்ந்த சிந்தனை நமது அரசிடம் இருக்கிறது ஆக அனைத்து பணத்தையும் அரசு எடுத்துக் கொண்டு கோவில் பராமரிப்புக்கு என்று நிதி ஒதுக்காமல் பல கோவில்கள் அந்தந்த ஊர்களில் வாழும் மக்களின் கூட்டு முயற்சியால் மக்கள் மக்களுக்கிடையில் நன்கொடைகளை வசூலித்து கோவில் திருப்பணிகளை செய்து வருவதும் நாம் அறிந்த விஷயம். மக்கள் ஆட்சியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு உதவிகளை செய்து பெரும்பான்மை சமூகத்தை வஞ்சிப்பது மக்களாட்சி என்று நீங்கள் உண்மையில் நம்புகிறீர்களா?


உண்மை என்ன?

இது முற்றிலும் பொய்யான தகவல்.

தமிழ்நாட்டில் உள்ள கோயில், மசூதி, தேவாலயம், மடம் என அனைத்து பொது வழிபாட்டு தலங்களுக்கும் ஒரே அளவிலான மின் கட்டணமே மின்வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2023-24 ஆண்டுக்கான மின்வாரியத்தின் அறிக்கையின்படி, அனைத்து பொது வழிபாட்டு தலங்களுக்கும் 0-120 யூனிட் அளவிலான பயன்பாட்டுக்கு ரூ.5.90 விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கான மானியம் ரூ.3 போக மீதம் ரூ.2.90 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது

என தமிழக உண்மை சரிபார்ப்பு குழு அறிவித்துள்ளது

ஆதாரம் பார்க்க இங்கு கிளிக்இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/tn_factcheck/status/1793574486857617487

Tags: மறுப்பு செய்தி FACT CHECK

Give Us Your Feedback