கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி - சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி - சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது; சட்டத்திற்கு உட்பட்டு கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் கூழ் வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு, மே 18 ம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி விழா கமிட்டி காவல் நிலையத்தில் மனு அளித்தனர் காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. அதனை எதிர்த்து அந்த கிராமத்தைச் சேர்ந்த கேசவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அப்போது அரசுத்தரப்பு வழக்கறிஞர் மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததாக விளக்கம் அளித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது. தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி, ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், சட்டத்துக்கு உட்பட்டு கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கவேண்டும் என, வளத்தி காவல் நிலையத்தினருக்கு உத்தரவிட்டார்
Tags: தமிழக செய்திகள்
