Breaking News

அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட உள்ள பிராட்வே பேருந்து நிலையம் - மாதிரி புகைப்படங்கள் வெளியீடு

அட்மின் மீடியா
0

அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட உள்ள பிராட்வே பேருந்து நிலையம் - மாதிரி புகைப்படங்கள் வெளியீடு


சென்னையில் மிகவும் பழமை வாய்ந்த பிராட்வே பேருந்து நிலையத்தை மேம்படுத்த ரூபாய் 823 கோடியில் நவீன வசதிகளுடன் வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையமாக பிராட்வே பேருந்து நிலையத்தை மாற்ற தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது. 

பிராட்வேயில் மல்டி மாடல் இண்டர்க்ரேசன் என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கும் பணிக்காக பிராட்வே பேருந்து நிலையம் தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. 

தற்காலிகமாக பேருந்து நிலையம் அமைக்கும் பணியினை சென்னை மாநகராட்சி சார்பில் 5 கோடி செலவில் செய்யப்பட்ட வருகிறது. அதன் பிறகு பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு போக்குவரத்து முனையம் அமைக்கும் பணி தொடங்கப்படும் . 

                  

ஒன்பது மாடி கொண்ட வணிக வளாகத்துடன் பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. இந்த சூழலில் நவீன வசதிகளுடன் கட்டப்பட உள்ள சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் நான்கு மாடல் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback