லாரியின் டீசல் டேங்க் வெடித்து தீ விபத்து துணிச்சலுடன் தீயை அனைத்த பங்க் ஊழியர் - வைரல் சிசிடிவி வீடியோ
தெலங்கானா மாநிலம், புவனகிரியில் பெட்ரோல் பங்கில் லாரியின் டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்தது லாரி டேங்க் வெடித்து தீப்பிடித்ததும் பெட்ரோல் பங்கின் ஊழியர்களில் ஒருவர் மட்டும் துணிவுடன் முன்வந்து தீயணைப்பு கருவியை எடுத்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார்
தெலுங்கானா மாநிலம், புவனகிரி புறநகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பெட்ரோல் பங்கில் நேற்று ஒரு லாரி டீசல் நிரப்ப பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென லாரியின் டீசல் டேங்க் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் உடனடியாக பெட்ரோல் பங்கில் இருந்த தீயணைப்பு கருவியை எடுத்து வந்து துரிதமாக செயல்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார்.
இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த தீ விபத்து சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/thenewsfifteen/status/1792502772950008112
Tags: இந்திய செய்திகள்
