Breaking News

கோவை காந்திபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்து தனியார் பேருந்து பயணிகள் மீது மோதிய அதிர்ச்சி சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, பேருந்துக்காக காத்திருந்த மக்கள் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் அதிகாலை 5.30 மணி அளவில் தனியார் நகரப் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிலையத்துக்குள் வேகமாக அங்கு நின்று இருந்த பயணிகள் கூட்டத்தில் புகுந்தது. இதனால் பயணிகள் அலறி அடித்து ஓடினர். ஆனாலும் சில பயணிகள் மீது மோதிய பேருந்து, முன்னால் நின்று கொண்டிருந்த கிணத்துக்கடவு செல்லும் அரசு பேருந்தின் பின்பகுதியில் லேசாக மோதிவிட்டு நின்றது. 

இச்சம்பவத்தில்  10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்து க்கும் காயமடைந்தவரை ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றன

 வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/wilson__thomas/status/1787810113321095427

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback