Breaking News

படையப்பா யானையிடம் சிக்கி நூலிழையில் உயிர் பிழைத்த இளைஞர்கள் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

படையப்பா யானையிடம் சிக்கி நூலிழையில் உயிர் பிழைத்த இளைஞர்கள் வைரல் வீடியோ


கேரள மாநிலம் மூணாறு பகுதியில், நல்லதண்ணி அருகே உள்ள கல்லாரில் காட்டு யானை படையப்பாவிடம் இருந்து உயிர் தப்பிய வீடியோ வைரல் ஆகின்றது

கோனியிலிருந்து மூணாறுக்கு இரண்டு வாகனங்களில் சென்ற பாதிரியார் மற்றும் நான்கு இளைஞர்கள், வழியில் படையப்பா யானையை எதிர்கொண்டனர். 

படையப்பா யானை இரண்டு வாகனங்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியது.படையப்பா யானையைக் கண்டதும் அவர்கள் இரு வாகனங்களுடனும் சாலையை இடைமறித்து யானையை நெருங்க விடாமல் தடுக்க முயன்றனர். ஆனால் படையப்பா யானை அருகில் வந்தவுடன் அவர்கள் தங்கள் வாகனங்களில் இருந்து இறங்கினர். 

யானையை விரட்ட முயற்ச்சி செய்தனர் ஆனால் படையப்பா இளைஞர்களை நோக்கி ஆவேசத்துடன் முழக்கமிட்டது. உடனடியக அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடியதை அடுத்து, படையப்பா அருகில் உள்ள காட்டுக்குள் சென்று மறைந்தது. யானை வெளியேறியதைத் தொடர்ந்து, குழுவினர் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுக்க அந்த வீடியோ தற்போது வைரல் ஆகின்றது

வீடியோ பார்க்க் இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/Srinietv2/status/1795066103716069778

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback