Breaking News

பஸ், ரயில் , மெட்ரோ அனைத்துக்கும் ஒரே டிக்கெட்.. ஜூன் முதல் அறிமுகம்

அட்மின் மீடியா
0

சென்னையில் பொதுப்போக்குவரத்துக்காக மின்சார ரயில் , மெட்ரோ ரயில் பேருந்து ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் சென்னையில் மாநகர பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஏற்கனவே மாநகரப் பேருந்தில் பயணிக்க மாநகர் போக்குவரத்து கழகத்தால் சீசன் டிக்கெட் வழங்கப்படுகிறது. அதேபோல், மெட்ரோ ரயிலில் பயணிக்க பயணிகளுக்கு பயண அட்டை வழங்கப்படுகிறது. மேலும் புறநகர் ரயிலில் பயணிக்க குறிப்பிட்ட இடத்தில் இருந்து குறிப்பிட்ட இடத்திற்கு பயணிக்க சீசன் டிக்கெட் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரி இருந்தது. இந்நிலையில் ஜூன் 2ம் வாரம் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

இதன் மூலம் ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி 3 வகையான போக்குவரத்திலும் பயணிக்க வசதியாக பிரத்யேக கார்டு ஒன்று வழங்கப்படும்.

 இந்தக் கார்டுகளை ரீசார்ஜ் செய்து மக்கள் பயணித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback